Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் புகார் எதிரொலி..! கேரள அரசின் குழுவிலிருந்து முகேஷ் நீக்கம்..!!

Mukesh

Senthil Velan

, புதன், 28 ஆகஸ்ட் 2024 (12:56 IST)
பாலியல் புகாருக்கு ஆளான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ், திரைப்பட கொள்கை வகுப்பதற்கான கேரளா அரசின் குழுவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
மலையாள திரையுலகில் நிலவி வரும் பாலியல் புகார்கள் குறித்து நீதிபதி ஹேமா குழு விசாரணை நடத்தி மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கையை அளித்தது.  அந்த அறிக்கையில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த குழு செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளது. 
 
புகார்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில் நடிகைகள், பிரபல மலையாள நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு மனு அளித்தனர். நடிகர் முகேஷ் பாலியல் ரீதியில் தனக்கு தெரிந்த நடிகையிடமும், நடிகையின் தாயிடமும் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை சந்தியா புகார் அளித்தார். மேலும் அந்த நடிகையின் முகவரியை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடமும் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தவறாக நடந்து கொண்டதால் வீட்டில் இருந்து நடிகர் முகேஷ் துரத்தியடிக்கப்பட்டார் என்று நடிகை சந்தியா தெரிவித்தார். பாலியல் புகாரை தொடர்ந்து   திரைப்பட கொள்கை வகுப்பதற்கான கேரளா அரசின் குழுவிலிருந்து முகேஷ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 
மேலும் பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சித்திக் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு.! நடிகை ரேவதி அளித்த புகாரில் அதிரடி.!!