Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனின் பாலியல் அரட்டை: ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவு

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (12:31 IST)
சமூக வலைதளங்களை இளைஞர்களும், மாணவர்களும் தவறான, அதாவது பாலியல் ரீதியான விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என பரவலாக பேசுவார்கள். இதற்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது கொல்கத்தாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


 
 
கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகம் அந்த மாணவனை எச்சரித்தது. இந்நிலையில் மீண்டும் அந்த மாணவியுடன் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக அரட்டை அடித்து அதனை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக மாணவியுடன் பேசியவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளான்.
 
இந்த பதிவு ஃபேஸ்புக்கில் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதனை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பகிர்ந்துள்ளனர். மாணவி குறித்த ஆபாசமான தகவல்களை அந்த மாணவன் ஜாதவ்பூர் பல்கலைக்கழம் உள்ளிட்ட பிற பல்கலைக்கழகத்திலும் பரப்பி உள்ளான்.
 
இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்த மாணவனுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாணவன் இதேப்போல் மேலும் 12 மாணவிகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவனை பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரம் கொல்கத்தாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

அடுத்த கட்டுரையில்