Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கு.! முன்ஜாமீன் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு..!

Senthil Velan
புதன், 29 மே 2024 (17:05 IST)
பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.  மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.  இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ALSO READ: பிரிஜ் பூஷண் சிங் மகனின் கார் மோதி விபத்து..! 17 வயது சிறுவன் உட்பட இருவர் பலி..!
 
இதை அடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மே 31 ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை  வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

அடுத்த கட்டுரையில்