Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை - நிதின் கட்கரி

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (13:11 IST)
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மோடி அரசின் 100 நாள் செயல்பாடு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை மற்று பாதையில் செயல்படுத்துவது குறித்து இந்திய ரயில் தொழில்நுட்பப் பொருளாதார சேவை நிறுவனத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஆலோசனைகள் தற்போது பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஒரு மாதத்திற்குள் மத்திய அமைச்சராவை கூட்டத்தில் பரிசீலனைக்கு வைத்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சாலை போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை துறைகளில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் போக்குவரத்து, கப்பல் துறைகளின் பங்களிப்பு, குறைந்த பட்சம் 2% இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாள் ஒன்றுக்கு 30 கிமீ தொலைவுக்கு சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments