Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடுப்பி அருகே பயங்க விபத்து - 8 பள்ளி மாணவர்கள் பலி

உடுப்பி அருகே பயங்க விபத்து - 8 பள்ளி மாணவர்கள் பலி

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (13:45 IST)
உடுப்பி அருகே பள்ளி வேன்- பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பள்ளி வேன்-தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிரியை ஒருவர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
 
கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே உள்ள குந்தாப்பூர்  டான்பாஸ்கோ பள்ளிக்கான வேனில் ஆசிரியை பிலோமினா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மொத்தம்  18 பேர் பயணம் செய்தனர்.
 
இந்த வேன், டிராசி பகுதியிலுள்ள மொகடி கிராஸ் என்ற பகுதியில் சென்றபோது, பைந்தூரிலிருந்து குந்தாப்பூருக்கு சென்ற தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது.
 
இந்த விபத்தில், எல்கேஜி மாணவி களிஷ்டா, ஒன்றாம் வகுப்பு மாணவி, அனன்யா, செலிஷ்டா, அல்விடா, 7 ஆம் வகுப்பு மாணவி நிகிதா உள்ளிட்ட 6 மாணவிகளும், 2 மாணவர்களும் அதே இடத்தில் பலியானார்கள். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த விபத்து உடுப்பி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments