Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனம் செய்யக்கூடாது: எஸ்பிஐ ஊழியர்களுக்கு வங்கி நிர்வாகம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (18:45 IST)
எஸ்பிஐ ஊழியர்களுக்கு வங்கி நிர்வாகம் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்கிகள் விடுமுறை அளிக்காமல் முழுநேரமும் வங்கி ஊழியர்களை பணி புரிய செய்வது குறித்து வங்கி ஊழியர்கள் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் வங்கியின் கொள்கை முடிவு குறித்து வங்கி ஊழியர்கள் யாராவது சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது 
 
கொரோனா குறித்து வங்கி ஊழியர்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என்றும் அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் கொரோனாவின் ஆபத்து குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் பதிவிடலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் வங்கியின் கொள்கை முடிவு குறித்து யாரும் விமர்சனம் செய்யக்கூடாது அவ்வாறு வங்கியின் கொள்கை முடிவை விமர்சனம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வங்கியின் கொள்கை முடிவை விமர்சனம் செய்த 2 பேர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது
 
இந்த நிலையில் அனைத்திந்திய வங்கி யூனியன் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது எஸ்பிஐ வங்கியின் இந்த நடவடிக்கையை ஊழியர்களின் பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் நசுக்கும் வகையில் இருப்பதாகவும் இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்த ஒரு கொள்கையையும் விமர்சிக்க உரிமை உண்டு என்றும் தெரிவித்து தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments