Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்.. சானியா மிர்சா ஆதரவு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (18:35 IST)
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 
 
அவர் இந்த போராட்டம் குறித்து கூறிய போது ’ஒரு விளையாட்டு வீராங்கனையாகவும் பெண்ணாகவும் இந்த நிகழ்வுகளை பார்ப்பதற்கே எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. விளையாட்டு வீராங்கனைகள் எல்லோரும் நம் நாட்டுக்காக பெருமையை சேர்க்க போராடி வருகின்றனர். அவர்களின் வெற்றியை நமது வெற்றி போல் நாம் கொண்டாடுகிறோம். அதனால் இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்போம், உண்மை எதுவாக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் போராட்டம் நடத்தி வரும் விளையாட்டு வீராங்கனைக்கு இர்பான் பதான் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்