Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெயரில் ரூ.5 லட்சம்- ஸ்டாலின் ; ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி

Webdunia
சனி, 29 மே 2021 (18:35 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.10 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .

தற்போது பாரத பிரதமர் மோடி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும், கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது ஆகும் வரை மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயது ஆகும்போது,   ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மோடி உறுதியளித்துள்ளார். இதில், கொரோனாவால் பெற்றோரை இழந்த அல்லது கார்டியனை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments