சப்பாத்திக்குள் ரூ.2000: நூதன முறையை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (17:08 IST)
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் விடிய விடிய சோதனை செய்து பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பலமடங்கு அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர்.,
 
திருமங்கலம் பார்முலாவில் வினோத முறையில் மக்களிடம் பணத்தை கொண்டு போய் சேர்த்தது போல் தற்போது புதுசு புதுசாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் சப்பாத்திக்குள் பணத்தை வைத்து கொடுப்பது. 
 
சப்பாத்தி மாவை உருட்டும்போதே அதில் ரூ.500, ரூ.2000 என வைத்து பின்னர் அதை சப்பாத்தியாக்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சப்பாத்தியை இரண்டாக பிரித்தால் அதில் ரூ.2000 இருக்கும்.
 
இந்த வினோத முறையை கர்நாடகாவை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டு இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுங்கள் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இவர்தான் சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள்.. ஒன்று கூட இந்தியாவில் இல்லையா?

இன்று ஒரு கிராம் தங்கம் 12,900, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000. தங்கத்தின் விலையை நெருங்கும் மல்லிகை..!

பராசக்தி படம் தோல்வின்னு சொன்னாங்க!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட மாணிக்கம் தாகூர்!....

மெரினா கடற்கரையில் இனி இதை செய்தால் ரூ.5000 அபராதம்.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!

தளபதி வராரு!. பாதுகாப்பு கொடுங்க!.. டெல்லியிலும் அலப்பறை பண்ணும் தவெக!...

அடுத்த கட்டுரையில்
Show comments