Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியால் இறந்த தந்தை.. டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய ரொனால்டோ ! பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:21 IST)
உலகில் நம்பர் ஒன் கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்,திடீரென தன் தனது தந்தையைப்  பற்றி கூறுகையில் சற்று உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இந்த வீடியோ   வைரலாகிவருகிறது.
போர்சுகல் நாட்டின் கால்பாந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது ஜூவெண்ட்ஸ் எஃப்.சி (Juventus F.C.) என்ற கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் பிரிட்டன்  ஊடகம் ஒன்றின் நேர்காணலில் ரொனால்டோ  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ,அவரது தந்தை ஜோஸ் டினிட் அவெரொ ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத் தொகுப்பை ஒளிபரப்பினர். அந்த நேரத்தில் ரொனால்டோவின் தந்தை ரொனால்டோவைக் குறித்து பாராட்டிப் பேசுவது போன்ற வீடியோவைப் பார்த்த ரொனால்டோ கண்கலங்கிவிட்டார். சிறிது நேரத்திற்குப் பின் நிதானத்துக்கு வந்த ரொனால்டோ, தான் இந்த வீடியோவை இப்பொழுதான் பார்ப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும். ’உங்களுக்கு எதாவது கவலை இருக்கிறதா என நெறியாளர் கேட்டார். அதற்கு, உலகின் நெம்பர் ஒன் வீரனாக நான் இன்று இருக்கிறேன். ஆனால் அதைப் பார்க்க எனது அப்பா  இன்று உயிருடன் இல்லை என வேதனையுடன் ரொனால்டோ பதில் கூறினார்.பின்னர், நீங்கள் உயரிய நிலைக்கு வந்ததை உங்கள் பார்த்ததில்லையா என கேட்டார் நெறியாளர். அதற்கு, இல்லை என்று வருத்தத்துடன் பதிலளித்தார் ரொனால்டோ. ‘இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் செல்கிறது.
 
ரொனால்டோவின் தந்தை  ஜோஸ் டினிட் அவெரொ, மதுவுக்கு அடிமையாகி அடிமையானதால் அவரது கல்லீரல் செயலிழந்துவிட்டது. ரொனால்டோவுக்கு 20 வயது இருக்கும் போது, கடந்த 2005 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு ரொனால்டோ கால்பந்தாட்ட கிளப் அணிகளில் சேர்ந்து உலகின் கால்பந்தாட்ட நட்சத்திர வீரராக விளங்கியதைப் பார்க்காமலே தந்தை இறந்துவிட்டதை நினைத்து ரொனால்டோ இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments