Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ நிறுவன தலைவர் முஞ்சால் மறைவு

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (16:12 IST)
இந்திய இருசக்கிர வாகனத் துறையின் தூண் என்று வர்ணிக்கப்படும் ஹீரோ நிறுவனத்தின் தலைவர் ரிஜி முஞ்சால் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.


 
 
1923 ல் பாகிஸ்தானின் கமலியா என்ற இடத்தில் பிறந்தவர் முஞ்சால். தனது அசாத்திய இயந்திரவியல் திறமையால் படிப்படியாக முன்னேறியவர் பிற்பாடு ஹீரோ மோட்டார் கார்ப் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் 1984 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் கைகோர்த்த முஞ்சால் ஹீரோ ஹோண்டா என்ற பெயரை இந்தியா முழுவதும் பரீட்சியப்படுத்தினார்.
 
முஞ்சாலின் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் 1986ம் ஆண்டு முதல் தொடர்ந்து மிகப் பெரிய சைக்கிள் நிறுவனமாகத் திகழ்கிறது. 92 வயதை எட்டிய முஞ்சால் சமீபகாலமாக வயோதிகம் காரணமாக உடல்நிலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

Show comments