பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு: மறுதேதி அறிவிப்பு

Siva
புதன், 15 ஜனவரி 2025 (09:50 IST)
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வின் மறு தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய தேர்வு முகமை நடத்தும் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, ஜனவரி 14 முதல் 16 வரை கொண்டாடப்படுவதால் இந்த தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மதுரை எம் பி சு வெங்கடேசன் உள்பட பலர் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை வைத்தனர்.
 
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, ஜனவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யு.ஜி.சி. நெட் தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments