Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்: குடியரசுத்தலைவர் உரை

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (07:39 IST)
66 ஆவது குடியரசு தினவிழாவையொட்டி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும் என்று கூறி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
 
இது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், “66 ஆவது குடியரசு தினவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நமது ஆயுதப்படை, துணை ராணுவ படைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு என்னுடைய சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தனிப்பெரும்பான்மையுடன் நாட்டில் உறுதியான அரசு அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசு உறுதி கொண்டுள்ளது.
 
நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் வீர வணக்கம். பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.
 
பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே சர்வதேச சக்தியாக நாடு உருவெடுக்கும். பெண்களுடைய கவுரவத்தை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும்.
 
மத சுதந்திரம், பாலின சமத்துவம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை உறுதியுடன் முறியடிக்க வேண்டும். நாட்டில் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும்“ என்று  பிரணாப் முகர்ஜி கூறினார்.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments