Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் புனிதமானது அல்ல; அங்கும் பாலியல் தொல்லை?

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (11:43 IST)
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து #MeToo என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி, பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கும் பெண்கள் மட்டுமின்றி அனைவரும் டுவீட் செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி விவகாரம் தெலுங்கு சினிமாவில் புயலாய் உருவெடுத்தது. பாலியல் ஆளுமைக்கு அடிபணிந்து போனால்தான், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக தொடர்ந்து பல நடிகைகள் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இதை ஆதரித்து பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பியும் மூத்த தலைவருமான ரேணுகா சவுத்ரி, 'சினிமா துறையில் மட்டும் பாலியல் தொல்லை நடைபெறுவதில்லை. அனைத்து துறைகளிலும் நடக்கிறது. இது ஒரு கசப்பான உண்மை. 
 
நாடாளுமன்றமோ அல்லது மற்ற பணி இடங்களோ புனிதமானது என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். பெண்களுக்கு எங்கும் இது போன்ற பிரச்சனை இருக்கும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்