Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார சரிவிலும் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:03 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வருவாயை உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.

சமீப காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும், பங்கு மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மிகவும் பின்தங்கி இருந்த நிறுவனம் ஜியோ நிறுவனத்தை தொடங்கியவுடன் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஆஃபர்களை மக்களுக்கு அளித்து தனது நிறுவனத்தை விரிவுப்படுத்திய ஜியோ தற்போது ஜிகாஃபைபர் என்ற இணைய சேவை வசதியையும் அறிமுகப்படுத்தியது.

இதனால் தொடர்ந்து வர்த்தகத்தில் ஏறுமுகம் கண்டுள்ள ஜியோ கடந்த மாதம் 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை பெற்றது. இந்திய நிறுவனங்களிலேயே முதன்முறையாக 9 லட்சம் கோடி தொட்ட நிறுவனம் இதுவாகும். இந்நிலையில் தற்போது ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிக வருமானம் ஈட்டி 10 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக சில சரிவுகள் இந்திய பங்கு சந்தையை பாதித்துள்ள போதும் ரிலையன்ஸ் இந்த சாதனையை புரிந்திருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments