Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைமாத கர்ப்பினி பெண்ணை அண்டாவில் வைத்து தூக்கி சென்ற உறவினர்கள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (17:56 IST)
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை அண்டாவில் உட்கார வைத்து தூக்கி சென்றுள்ளனர் உறவினர்கள்.

சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கர்ப்பமாக இருந்ததால், தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு வலி ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர் உறவினர்கள். ஆனால் ஊரைக் கடக்க ஆற்றைக் கடக்க வேண்டும். மழைப் பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்திருக்கிறது.

ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பெரிய அண்டா ஒன்றில் அந்த பெண்ணை உட்கார வைத்து தண்ணீரில் தூக்கி சென்றுள்ளனர். இவ்வளவு இன்னல்களைக் கடந்து அவரைத் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்கள் இன்னும் பிரசவத்துக்கான நேரம் வரவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் அவர் வலியோடு அங்கேயே உட்காரவைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஷிப்ட் மருத்துவர்கள் வந்து பார்த்தபோது அவருக்கு குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments