Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்திய 10 தமிழர்கள் கைது

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2016 (05:17 IST)
ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்திய வழக்கில்10 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
 

 
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள கரக்கம்பாடி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளது. இந்த செம்மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கடத்திச் செல்வதாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
 
அதன்பேரில், திருப்பதி டிஎஸ்பி இலியாஸ் பாட்ஷா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக சென்ற ஒரு லாரி மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.30 லட்சம் மதிப்பு கொண்ட செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழர்கள் 10 பேரை கைது செய்தனர்.
 
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments