Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பப்ஸ் மேல் வாக்கிங் சென்ற எலி! அதையும் விற்ற கடைக்காரர்! - அதிர்ச்சி வீடியோ!

Prasanth Karthick
திங்கள், 8 ஜூலை 2024 (09:11 IST)

சமீப காலமாக உணவுகளின் தரம் குறித்த பல பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ரயில் நிலைய கேண்டீனில் பப்ஸ் மீது எலி ஊர்ந்து செல்லும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில காலமாக உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படும் தரம் குறித்த பல கேள்விகளை எழுப்பும் விதமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்க்ரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுபோல ஐஆர்சிடிசியில் ஆர்டர் செய்த உணவில் குளோப் ஜாமுனில் கரப்பான் பூச்சி இருந்த வீடியோவும் வைரலானது.

அந்த வகையில் தற்போது மற்றுமொரு வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கேண்டீன் ஒன்றில் அடுக்கப்பட்டிருந்த சிக்கன் பப்ஸில் எலி ஒன்று ஏறி சுற்றித் திரிகிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அந்த உணவுகளை விற்பனையாளர் விற்பனை செய்து வருகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதையுமே நம்பி வாங்கி சாப்பிட முடியாது போல இருக்கிறது என பலரும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ????
byu/Aggressive_Basil923 inkolkata

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments