Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக தலைவர்

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (11:42 IST)
பாஜக தலைவர் ஜெயேஷ் பட்டேல் தான் நடத்தும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியையே பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஜெயேஷ் பட்டேல் (66). ஜெயேஷ் பட்டேல், வதோதராவில் ’பரூல்’ என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார்.
 
இங்கு நர்சிங் பட்டப்படிப்பு படித்த 22 வயது மாணவி ஒருவரை ஜெயேஷ் பட்டேல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக புகார் கூறப்பட்டது. கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அந்த மாணவியை விடுதி நிர்வாகி பாவனா, ஜெயேஷ் பட்டேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்
 
அங்கு அவரை ஜெயேஷ் பட்டேல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இது பற்றிய தகவல் அறிந்ததும், ஜெயேஷ் பட்டேல் மற்றும் விடுதி நிர்வாகி பாவனா ஆகியோர் இருவரும் தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து வரோதட திரும்புகையில் ஜெயேஷ் பட்டேலை இரவு 10.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
 
இந்த குற்றச்சாட்டை சமாளிக்கும் விதமாக, ஜெயேஷ் பட்டேல் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார் என்றும், தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம் என்றும் பாஜக தரப்பு கூறியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்