Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது மகளை 11 மாதங்களாக மிரட்டி கற்பழித்த காமக் கொடூர தந்தை: சிறுமி 4 மாதம் கர்ப்பம்

Webdunia
திங்கள், 28 ஜூலை 2014 (12:28 IST)
கர்நாடக மாநிலம் ஹாவேரியில் 11 மாதங்களாக 12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து 4 மாத கர்ப்பிணியாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
 
ஹாவேரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பசய்யா அஜய்குமார்(வயது 35). வாகன விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி அந்த பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளாள். பசய்யா அஜய்குமாரின் மனைவி நீதிமன்ற வேலை விஷயமாக அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பசய்யா அஜய்குமார் வீட்டில் தனியாக இருக்கும் 12 வயது சிறுமியை பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் கடந்த 11 மாதங்களாக கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாகவும் சிறுமியை அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தன்னுடைய மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் அவளை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து வயது சிறுமியிடம் கேட்டார். அப்போது அந்த சிறுமி, தன்னை கடந்த 11 மாதங்களாக மிரட்டி பலவந்தமாக தந்தை பசய்யா அஜய்குமார் கற்பழித்து வந்ததாகவும், அவர் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று கண்ணீர் மல்க கூறினார்.
 
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஹாவேரி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தை பசய்யா அஜய்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
பெற்ற மகள் என்றும் பார்க்காமல் 12 வயது சிறுமியை 11 மாதங்களாக மிரட்டி தந்தையே கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments