Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சூரன்ஸ் போட்டு மனைவி கொலை! கணவனின் பக்கா ப்ளான்! – சிக்கியது எப்படி?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (14:01 IST)
ராஜஸ்தானில் மனைவியை இன்சூரன்ஸ் பணத்திற்காக கூலிப்படை மூலம் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர் மகேஷ் சந்திரா. இவரது மனைவி ஷாலு தேவி. இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் ஷாலு தேவி தனது சகோதரர் ஒருவருடன் பைக்கில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதில் பலியானார்.

இந்த வழக்கை விபத்து என போலீஸ் முடிக்க இருந்த நிலையில் ஷாலுவின் கணவர் மகேஷ் சந்திரா மீது சந்தேகம் வந்துள்ளது. இறந்த ஷாலு தேவி உடல் ஒப்படைக்கப்பட்டதும் கதறி அழுத மகேஷ் சந்திரா ஒரு மணி நேரத்திற்குள் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மகேஷ் சந்திராவின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த போலீஸார் அவரின் மொபைல் மற்றும் சுற்றுபுறமுள்ள சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை சோதனை செய்துள்ளனர்.

ALSO READ: திருமண வரவேற்பில் முத்தம் கொடுத்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

அதில் ஷாலு தேவி தனது சகோதரருடன் பைக்கில் புறப்பட்டதும், மகேஷ் சந்திரா காரில் உள்ள நபர்களுக்கு சைகை காட்டி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது. இதனால் மகேஷ் சந்திராவை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மகேஷ் சந்திராவுக்கும் ஷாலு தேவிக்கும் திருமணமான போது சொன்னபடி ஷாலு பெற்றோர் மகேஷ் சந்திராவுக்கு வரதட்சணை தரவில்லை. ஷாலுவுக்கும் மகேஷுக்கும் கூட அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் மனைவியை கொன்று விட மகேஷ் சந்திரா எண்ணியுள்ளார்.

ஆனால் அது பயனுள்ள வகையில் இருக்க வேண்டுமென எண்ணியவர் மனைவி பெயரில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். பின்னர் ஒரு வருடம் நல்லபடியாக மனைவியிடம் நடந்து கொண்டுள்ளார். விபத்தில் இறந்தால்தான் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்பதால் விபத்து போலவே கூலிப்படையை வைத்து கொலையை நடத்தியுள்ளார். இதை அவர் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்