Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய கல்யாண்சிங் கோரிக்கை

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (02:37 IST)
நமது தேசிய கீதத்தில் பிரிட்டிஷ் அரசை பாராட்டும் வகையில் உள்ள `அதிநாயக’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என  ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.
 

 
ராஜஸ்தானில் நடைபெற்ற பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
நமது தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். அவர் மீதும், தேசிய கீதம் மீதும் நமக்கு எல்லாம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது.
 
ஆனால், தேசியகீதத்தில் உள்ள அதிநாயக என்ற வார்த்தையை நீக்க  வேண்டும். காரணம், இது பிரிட்டிஷ் அரசை பாராட்டும் வகையில் உள்ளது. அதற்கு பதிலாக `மங்கல் காயே’ என்ற வார்த்தையை சேர்க்கலாம் என்றார்.
 
இந்த கவிதையை ரவீந்திரநாத் தாகூர் எழுதிய போதே, அது பிரிட்டிஷ் அரசை பாராட்டுவதாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், அதை அப்போது  ரவீந்திரநாத் தாகூர் மறுத்தார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்பு, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments