Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை: அதிகாரிகள் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:43 IST)
ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வியாபாரிகள் அல்லது ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
ரயில் நிலையங்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விதிகளை மீறி எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் ஆயிரம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதுபோன்ற விதிமீறல் தொடர்ந்து ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments