Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார்: கமல்நாத் தகவல்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (15:13 IST)
கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது.
 
கட்சியில் தனது ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் சிலர் ஏற்காமல் தடுத்துவிடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு ராகுல் காந்தி விடுமுறையில் சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
 
ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக அவர் தன்னை தயார் செய்துகொள்ளவே ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
மேலும் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கபடுகிறது” என்று தெரிவித்தார்.
 
ராகுல் காந்தி நாடு திரும்பிய பிறகு காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றங்களை ராகுல் காந்தி செய்யக்கூடும் என்ற காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments