Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி?

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:52 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் கடந்த மாதம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததாலும் ராகுல் காந்தியின் தலைவர் பதவிக்கு ஆதரவு தெரிவித்து 89 பேர் முன்மொழிந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாலும், ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments