Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ் குமாரை சந்திக்க ராகுல் காந்தி முயற்சி: அதிருப்தியைச் சரிசெய்ய சமாதானமா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (16:56 IST)
சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பிரதமர் வேட்பாளர்  என்று மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அறிவித்த நிலையில் அதற்கு நிதீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் நிதிஷ்குமாரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்ய இருப்பதாகவும் இரு தரப்பு சந்திப்பு மிக விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது 
 
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் முன்பே பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் விரும்புவதாகவும் அதன் தொடக்கமாக  பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது நிதிஷ்குமார் உள்பட ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிரதமர் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய நிதீஷ்குமார் உள்ளிட்ட ஒரு சில தலைவர்களை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் அடுத்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனே கார்கே பிரதமர் வேட்பாளர் என அனைத்து தரப்பும் ஒப்புக்கொள்ளும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90ஸ் கிட்ஸின் பேவரிட் ஷோவின் கதாசிரியர் மறைந்தார்! - ரசிகர்கள் அஞ்சலி!

இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல்..!

உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதா? ராமதாஸ் கண்டனம்..!

கடைசி நேரத்தில் தேர்வு ரத்து! தெலுங்கானா வரை சென்ற தமிழர்கள் அதிர்ச்சி!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments