Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எந்த பட்டனை அழுத்தினாலும், தாமரைக்கே ஓட்டு விழும்”.. எம்.எல்.ஏவின் வீடியோவை பகிர்ந்த ராகுல்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (14:13 IST)
”எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கே ஓட்டு விழும்” என ஹரியானா எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை பகிர்ந்துள்ளார்.

அதில், பாஜக எம்.எல்.ஏ. பக்சிஷ் சிங், பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களை மிரட்டியதாக தெரியவருகிறது. “நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும், எங்களுக்கு அது தெரிந்துவிடும். மோடியும், மனோகர்லால் கட்டாரும் (ஹரியானாவின் முதல்வர்) மிகவும் புத்திசாலிகள்.” என்று கூறுகிறார்.

மேலும், அதில், “நீங்கள் எந்த பட்டனை அழுத்தினாலும், அது தாமரை சின்னத்துக்கே போய் விழும்” எனவும் கூறியுள்ளார். இந்த காணொலியை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”பிஜேபியின் நேர்மையான மனிதர்” என கேலி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments