Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வெளிநாட்டு பயணம் சென்ற ராகுல்காந்தி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (07:43 IST)
காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
ராகுல்காந்தி எந்த காரணத்துக்காக வெளிநாடு சென்று இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது தனிப்பட்ட காரணத்திற்காக சென்றுள்ளதாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் நாடு திரும்புவார் என்றும் பதில் கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போல் திடீரென அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என்பதும் அதன் பின்னர் இத்தாலியில் உள்ள தனது பாட்டியை பார்க்கவே அவர் சென்றதாகவும் விளக்கமளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் இத்தாலி சென்றாரா? அல்லது வேறு நாடு சென்றுள்ளாரா என்பது அவர் திரும்பி வந்த பின்னரே தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments