Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ராகுல் காந்தி பேச்சு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (08:13 IST)
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் குஜராத் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது . ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகின்றன
 
மேலும் புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை அடுத்து மூன்றாவது மாநிலமாக குஜராத் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது
 
இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி குஜராத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் குஜராத்தில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் துரிதம் அடைந்தன என்று அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி, பாஜக கூறிவரும் பொய்களில் இதுவும் ஒன்று என்றும், குஜராத் மக்களை காங்கிரஸ் கட்சி காப்பாற்றும் என்றும் நடைபெறும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments