Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றுமா 2 கோடி கையெழுத்துகள்???

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:40 IST)
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரட்டிய 2 கோடி கையெழுத்துகளுடன் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் ராகுல் காந்தி. 
 
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். 29 நாட்களாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
இந்நிலையில் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரட்டிய 2 கோடி கையெழுத்துகளுடன் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் ராகுல் காந்தி. இந்த கையெழுத்துக்களுடன் ஆர்பாட்டம் மேற்கொண்டு பின்னர் குடியரசு தலைவரை ராகுல் காந்தி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments