Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனம் கொடுத்த ராகுல் காந்தி

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (11:05 IST)
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனம் கொடுத்த ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கின்ற்னர். ஒரு சிலர் சில நூறு கிலோமீட்டர்களும், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களும் நடந்து செல்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் டெல்லி வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த பக்கமாக சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக அவர்களை நிறுத்தி அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்
 
தாங்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தரும் படி அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ராகுல் காந்தியுடன் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு உணவு குடிதண்ணீர் உள்பட அனைத்து வசதிகளையும் கொடுத்து அவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்
 
இந்த உத்தரவை அடுத்து அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வாகனத்தில் பத்திரமாக ஊர் போய் சேர்ந்தனர். ராகுலாந்தியின் இந்த மனிதாபிமான முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியாகி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments