Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் நடத்துநர் பலாத்கார முயற்சி; தப்ப முயன்று குதித்த பெண் பலி

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:49 IST)
ஓடும் பேருந்தில் பலாத்காரம் முயன்ற நடத்துநரிடமிருந்து தப்புவதற்காக பேருந்தில் இருந்து தாயும் மகளும் குதித்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் பெண்மணி ஒருவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மோகா நகர் அருகே பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, அந்த பேருந்தின் இரு கண்டக்டர்களில் ஒருவர் அப்பெண்ணிடமும் அவரது மகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்கு பதில் வேகமாக செலுத்தியுள்ளார். மேலும், பல முறை அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் நடத்துநர் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
 
இதனால் பயந்துபோன அந்த பெண்மணி, ஒடும் பேருந்தில் இருந்து தனது மகளை தள்ளிவிட்டு, பிறகு அவரும் கீழே குதித்துவிட்டார். அவரது மகன் மட்டும் பேருந்தில் இருந்தான். இதில், பலத்த காயம் அடைந்த தாயும் மகளும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.
 
ஆனால், சிகிச்சை பலனின்றி 13 வயது மகள், உயிரிழந்தார். அந்த பெண்மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து, பஞ்சாப் முதல்வர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்தது என்று தகவல்கள் தெரியவந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை?? - அதிர்ச்சி தகவல்!

திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கே ஏற்றது.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்..!

மைக் புலிகேசி.. சீமானை மறைமுகமாக கிண்டல் செய்த திருச்சி டிஐஜி வருண்குமார்..!

அடுத்த கட்டுரையில்