Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஆண் குழந்தைதான் வேணும்; பெண் குழந்தையை மூழ்கடித்த தாய்! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (10:30 IST)
மும்பையில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பி பெண் குழந்தை பிறந்ததால் அதை தாயே நீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் புனே பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் சமீபத்தில் குழந்தை தண்ணீரில் விழுந்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர் பின்னர் குழந்தையை தான் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் வேறு வழியின்றி நீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பெண்ணை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments