Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்ட் சிகரம் ஏறி போலீஸ் தம்பதியினர் சாதனை

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (15:23 IST)
புனேவை சேர்ந்த காவல்துறை தம்பதியினர் எவரெஸ்ட் சிகரத்தில் ஒரே நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.


 

புனே நகரத்தைச் சேர்ந்த தினேஷ் ரத்தோடு அவரது மனைவி தார்கேஷ்வரி ஆகிய இருவரும் புனே காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். கணவன் மனைவி ஆகிய இருவரும் சிறந்த விளையாட்டு வீரர்கள்.

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவர்களது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி எடுத்து வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏற தொடங்கி நேற்று சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது. நாங்கள் இந்த சாதனை படைத்த பிறகுதான் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்ற முடிவுடன் இருந்தோம். நாங்கள் சாதனை படைத்து விட்டோம், என்றனர். 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments