Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கே மூடு பார்ப்போம்! மருந்துகடை வேலை நிறுத்தத்திற்கு கலெக்டர் வைத்த ஆப்பு

Webdunia
திங்கள், 29 மே 2017 (23:44 IST)
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என்று கூறப்பட்டது.



 


இந்த நிலையில் புதுச்சேரி கலெக்டர் ஒரே ஒரு உத்தரவை போட்டு மருந்துக்கடை அதிபர்களை அதிர வைத்துள்ளார். அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: , 'எனக்கு வந்திருக்கும் தகவல்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை புதுச்சேரியில் இருக்கும் அனைத்து மருந்துக் கடைகளையும் மூட புதுச்சேரி மருந்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். மருந்துக் கடைகளைப் பொறுத்தவரை, அது அத்தியாவசிய தேவைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதன்படி பார்த்தால், நாளை கடைகள் மூடப்படுவது அடிப்படையாகத் தேவைப்படும் மருந்துகளைக் கிடைக்கச் செய்யாத நிலையை உருவாக்கும். இதனால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே 144 தடை சட்டத்தின் கீழ், நாளை யாரும் மருந்துக் கடைகளை மூடக் கூடாது என்று உத்தரவிடுகிறேன். உத்தரவை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் மருந்துக்கடை அதிபர்கள் நாளை கடையை மூடுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.,
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments