Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பயங்கர வன்முறை: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு!

Webdunia
வியாழன், 21 மே 2015 (19:05 IST)
காஷ்மீரில் மறைந்த ஹூரியத் அமைப்பு தலைவர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடப்பட்டதால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 

 
மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில இடங்களில் தடை உத்தரவும் போடப்பட்டு இருந்தது.
 
இந்தநிலையில் வடக்கு காஷ்மீரில் பலகன் பட்டான் என்ற பகுதியில் ஸ்ரீநகர் - பாராமுல்லா ரோட்டில் இன்று திடீரென ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
 
உடனே அங்கு இருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால் யாரும் இடத்தை விட்டு செல்லாததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments