Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை சமாதானப்படுத்த காங்கிரஸ் அனுப்பிய நபர் – கடைசி முயற்சி !

Webdunia
புதன், 29 மே 2019 (08:54 IST)
காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளதை அடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் அவரது சகோதரி பிரியங்கா காந்தி.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் யார் சொன்னாலும் கேட்காத ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் படியும் பரிந்துரை செய்துள்ளார். இதனால் ராகுலை சமாதானம் செய்ய அவரது சகோதரி பிரியங்கா மூலம் தூதுவிட்டுள்ளது காங்கிரஸ். இப்போது பிரியங்கா காந்தி ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments