Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”100 முறை சொன்னாலும் அது உண்மையாகி விடாது”.. பாஜக மீது பாயந்த பிரியங்கா

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (15:11 IST)
பொருளாதார வளர்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் பிரியங்கா காந்தி.

மத்திய அரசின் 8 முக்கிய துறைகளில் வளர்ச்சி சதவீதம் 2.1 ஆக சரிந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் ஒத்துக்கொண்டுள்ள நிலையில் பல அரசியல் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாஜக அரசு, நாட்டில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும், 100 முறை பொய் கூறினாலும் அது ஒரு போதும் உண்மையாகிவிடாது என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மத்திய அரசு தேச வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளில் எப்போது ஈடுபடும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்ட செய்தி வெளிவந்ததை குறித்து பாஜக அரசு பொருளாதாரத்தை பஞ்சராக்கியுள்ளது என பிரியங்கா காந்தி கருத்து தெரிவுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments