Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிட்டி சோக்கா செம டேஸ்ட்டு: ட்யூன் செம ஹிட்டு! – மோடியின் ஹுனார் ஹாட் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:34 IST)
ஹூனார் ஹாட் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லியில் நடைபெற்ற கைவினை கலைஞர்களின் ஹூனார் ஹாட் திருவிழாவுக்கு சென்ற பிரதமர் மோடியின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓவிய மற்றும் கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை, கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தும் ஹுனார் ஹாட் கண்காட்சி திருவிழா டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்குள்ள பதார்த்தக் கடைக்கு சென்ற அவர் லிட்டி சோக்கா என்ற சுவையான உணவை மிகவும் விரும்பி உண்டதாகவும், சூடான குல்ஹட் தேனீரை பருகியதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்குள்ள கடைகளை பார்வையிட்ட பிரதமர் பலவிதமான ஓவியங்கள் கலைப்பொருட்கள் ஆகியவற்றை பார்த்து அதுகுறித்து கேட்டறிந்தார். அங்கிருந்த ஒரு இந்திய இசைக்கருவியை மிகவும் ஆர்வத்துடன் வாசித்து பார்த்துள்ளார் தற்போது அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments