Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தலாக் தடை சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல், செப்.19ஆம் தேதி முதல் அமல்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (09:31 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. முதலில் மக்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் அதன் பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதனை அடுத்து இந்த மசோதா வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, செப்டம்பர் 19ம் தேதிக்குப் பின்னர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்பவர்களுக்கு அச்சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு முன்னரே பல மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாக்களில் ஜனாதிபதி இன்னும் கையெழுத்திடாத நிலையில் அதற்கு பின்னர் வந்த முத்தலாக் தடை சட்டத்தில் அவசர அவசரமாக ஜனாதிபதி கையெழுத்திட்டது ஏன்? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக பாஜக அரசை கொண்டுவ ருவதில் பின்னணி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments