Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசின் இலவச திருமண நிகழ்ச்சியில் கர்ப்ப பரிசோதனை: 4 பெண்கள் கர்ப்பம் என தகவல்..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:44 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசின் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் இந்த திருமண ஜோடிகளுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
ற்று மத்திய பிரதேச அரசின் சார்பில் 219 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண ஜோடிகளுக்கு 56,000 நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதிர். 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடந்ததாக வெளியான தகவலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எந்த விதிமுறைகளின் அடிப்படையில் கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் 
 
 ஆனால் அரசு இதற்கு விளக்கம் அளித்த போது கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்றும் மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது என்றும் கூறினர். 
 
மேலும் சில பெண்கள் தங்களுக்கு மாதவிலக்கு பிரச்சனை இருப்பதாக கூறியதால் அவர்களுக்கு மட்டும் கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இந்த பரிசோதனையில் நான்கு பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் திருமணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்