Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் மோடி: பிரவீன் தொகாடியா

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (19:58 IST)
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இந்து மதத்திற்கான கட்சி என்ற முத்திரையில் இருந்து வரும் நிலையில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இன்று அயோத்தி வருகை தந்த முன்னாள் இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக பொறுமையாக உள்ளோம். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதை எப்படி சாதிப்பது என்பது எங்களுக்கு தெரியும். ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையெழுத்துகள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருக்கும் மசூதிகளுக்கு செல்கிறார், ஆனால் அருகே உள்ள அயோத்திக்கு இதுவரை அவர் ஒருநாள் கூட வந்ததில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments