Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களிடம் பாலியல் சில்மிஷம்: நடுரோட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (07:23 IST)
நடுரோட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை
பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இளைஞர்களுக்கு காவல்துறையினர் நடுரோட்டில் தோப்புக்கரணம் போடும் தண்டனை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக புகார் வந்ததையடுத்து அந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை அழைத்துச் செல்லும் போது தோப்புக்கரணம் போட்டு கொண்டு செல்லுமாறு தண்டனை கொடுத்தனர் 
அதுமட்டுமின்றி நடந்து சென்று கொண்டிருக்கும் போதே சுற்றிலும் நின்ற போலீஸார் அவர்கள் இருவரையும் அடித்துக் கொண்டே சென்றன.ர் இதை அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து வந்தனர் 
 
பெண்களை சில்மிஷம் செய்பவர்களுக்கு இது சரியான தண்டனைதான் என பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வந்தாலும் சட்டப்படி இது சரிதானா? என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர் 
 
இருப்பினும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பாக பெண்களின் ஆதரவு இந்த வீடியோவிற்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்