Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்குள் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர் மோடி!

Prasanth Karthick
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:40 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி 6 நாட்களுக்குள் 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேலைகள் தொடங்கி முடிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக இந்த மருத்துவமனைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ALSO READ: தட்டம்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பள்ளிகள் மூடப்பட்டதால் பரபரப்பு..!

காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் ரூ.1660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் அங்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இன்று காஷ்மீர் செல்லும் பிரதமர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதியன்று ஒரே நேரத்தில் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ராஜ்கோட், ஆந்திராவின் மங்களகிரி, பஞ்சாபின் பதிண்டா, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் மேற்கு வங்கத்தின் கல்யாணி ஆகிய பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments