Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்கு பிரதமரானாலும் கட்சிக்கு தொண்டன் நான்..! – பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (12:25 IST)
நாடு முழுவதும் பாஜக நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

பாஜக நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஏப்ரல் 7 முதல் 14 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் பலவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாஜக இளைஞர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் “காஷ்மீட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தாண்டு நிறுவன நாள் மூன்று காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாவது நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம், இரண்டாவது இந்தியாவிற்கு தொடர்ந்து வரும் புதிய வாய்ப்புகள். மூன்றாவது, இந்தாண்டு நடைபெற்ற 4 மாநில தேர்தலிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்திய அரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது. குடும்ப அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்த நிலையில் பாஜக மட்டுமே அதற்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மேலும் “மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு தொண்டன்  என்ற முறையில் கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, நானும் ஒரு தொண்டனாக என்னால் முடிந்ததைச் செய்வேன். உங்கள் தொண்டராக  உங்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா! இந்தியாவுக்கு தொல்லை தர புதிய ப்ளான்?

மன்மோகன் சிங் மறைவு எதிரொலி: இன்று அதிமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து..!

13000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி.. ரூ.21 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments