Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் பாஜக வென்றால் யார் முதல்வர்': பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (17:05 IST)
தெலுங்கானாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட ஒருவர்தான் முதல்வர் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். தெலுங்கானாவில் வரும் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  
 
இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக முதல் முறையாக தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும்  3 நாட்களாக தெலுங்கானாவில் நான் பிரச்சாரம் செய்யும் போது ஒரு எழுச்சியை பார்க்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
 
 தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட ஒருவர்தான் முதல்வர் என்றும் அதை நான் உறுதி செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.  
 
தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கு எதிராக பாஜக எதுவும் செய்யாது என்றும்  பாஜகவின் லட்சியம் பிஆர்எஸ் கட்சியின் பிடியிலிருந்து தெலுங்கானாவை விடுவிப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments