சீக்கிய குரு ரவிதாஸ் ஜெயந்தியான இன்று சீக்கியர் கோவிலில் பிரதமர் மோடி பாடல் பாடி தாளம் போட்ட வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாஜக மாநிலங்களில் வெற்றிபெற தீவிர பிரச்சாரம், வியூகங்களை வகுத்து வருகிறது.
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு எதிராக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றால் பஞ்சாபில் பாஜக மீது அதிருப்தி உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடி வாகனத்தை போராட்டக்காரர்கள் வழி மறித்ததால் அவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று சீக்கிய குருவான ரவிதாஸின் ஜெயந்தியில் டெல்லியில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மக்களுடன் பஜனை பாடல்கள் பாடி, தாளம் இசைத்து பாடினார். அதை தனது ட்விட்டரில் பகிர்ந்தும் உள்ளார். சீக்கியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.