Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த தயார்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:32 IST)
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது 
 
புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஏற்கனவே 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் சுமூக முடிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார் 
 
இந்த நிலையில் இதற்கு விவசாயிகள் சம்மதம் தெரிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்க வில்லை என்றும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம் நாங்கள் மத்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடினோம் என்றும் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கு நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தேதி முடிவாகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments