Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு மக்களுக்கு பிரதமர், குடியரசு தலைவர் பக்ரீத் வாழ்த்து!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (09:39 IST)
இந்தியா முழுவதும் இன்று இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று பக்ரீத் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று பக்ரீத் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள பிரதமர் மோடி “ஈத் முபாரக்! ஈத்-உல்-ஆதாவுக்கு வாழ்த்துக்கள். அதிக நன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்த நாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் “சக குடிமக்கள் அனைவருக்கும் ஈத் முபாரக். ஈத்-உஸ்-ஜுஹா என்பது அன்பு மற்றும் தியாகத்தின் உணர்வை வெளிப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் ஒரு திருவிழா ஆகும். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments