Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடும் ரயிலில் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி: ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வீடியோ

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (09:42 IST)
ஒடும் ரயிலில் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி
ஓடும் ரயிலில் சாகசம் என்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. படியில் நின்று கொண்டு ஒரு கையை மட்டும் பிடித்துகொண்டு ஒருகையை ஸ்டைலாக விட்டுக்கொண்டு பயணம் செய்யும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது போன்ற சாகச செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே துறையை அவ்வப்போது அறிவுறுத்தியும் ஒரு சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு இளைஞர் ரயிலில் படியில் பயணம் செய்து கொண்டே ஒரு கையை மட்டும் கம்பியை பிடித்துக்கொண்டு சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கை நழுவி கீழே விழுந்தார். இருப்பினும் நூலிழையில் அவர் உயிர் தப்பியதாக தெரிகிறது
 
இது குறித்த வீடியோ ஒன்றை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ’ஓடும் ரயிலில் இது போன்ற சாகச காட்சிகளை செய்வது துணிச்சலின் அடையாளம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது துணிச்சல் அல்ல. உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது. அதில் ஆபத்தை ஈடுபடுத்த வேண்டாம். தயவு செய்து அனைவரும் விதிகளைப் பின்பற்றுங்கள். பாதுகாப்பான பயணத்தை அனுபவியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments